ECONOMYMEDIA STATEMENTPBT

சமூக மண்டபம் நிர்மாணிக்க கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம்  43 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு

கோல சிலாங்கூர், அக் 6- இங்குள்ள ஹில்பார்க்கில் சமூக மண்டபம் நிர்மாணிப்பதற்கு  கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் 43 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த மண்டபம் சுற்றுவட்டாரத்திலுள்ள சுமார் 20,00 குடியிருப்பாளர்களுக்கு பயன் தரும் வகையில் அமையும் என்று ஊராட்சித் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

நான்கு பூப்பந்து மைதானங்கள், மேடை, ஒய்வு அறை, இரண்டு உடை மாற்றும் அறைகள், இரண்டு கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளை இந்த மண்டபம் கொண்டிருக்கும் என்று அவர் சொன்னார்.

மேலும், பெர்சியாரான் ஈக்கோ கிராண்டியர் 2 மற்றும் ஷோரியா சாலை சந்திப்பு வரை இணைப்பை ஏற்படுத்துவதற்காக 75 லட்சம் வெள்ளி செலவிலான விவேக ஒத்துழைப்புத் திட்டத்தையும் நகராண்மைக் கழகம் அமல்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார்.

சௌஜானா உத்தாமா பகுதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் ஏற்படும் வாகன நெரிசல் பிரச்னையைத் களைவதற்காக இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று அவர் மேலும் சொன்னார்.

இந்த திட்டத்திற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ள நிலையில் இதன் கட்டுமானப் பணிகள் வரும் நவம்பர் மாதம் தொடங்கி அடுத்தாண்டு ஜூலையில் முற்றுப் பெறும் என்றார் அவர்.


Pengarang :