Health professionals help patients with symptoms of the new coronavirus brought on a boat ambulance from Vila Amazonia community upon their arrival in Parintins, Amazonas state, Brazil, on June 27, 2020. – Parintins is well-known internationally for its Boi-Bumba folklore festival, which lasts for three days in late June and which themes, costumes and songs are based on indigenous cultures of the Amazon rainforest. A live streaming replaced the festival this year to prevent the spread of COVID-19. (Photo by MICHAEL DANTAS / AFP)
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

நாட்டில் நேற்று வரை 94.5 விழுக்காட்டினர் தடுப்புசியை முழுமையகப் பெற்றுள்ளனர்

கோலாலம்பூர், அக் 24- நாட்டில் நேற்று இரவு வரை சுமார் 2 கோடி 21 லட்சத்து 26 ஆயிரத்து 379 நான்கு பேர் அல்லது 94.5 விழுக்காட்டு பெரியவர்கள் கோவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளதாக  சுகாதார அமைச்சின் கோவிட் நாவ் (covidnow) அகப்பக்கம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், சுமார் 2 கோடி 28 லட்சத்து 8 ஆயிரத்து 491 பேர் அல்லது 97.4 பெரியவர்கள் குறைந்த்து ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அது தெரிவித்தது.

நேற்று மொத்தம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 547 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட வேளையில் அவர்களில்  94 ஆயிரத்து 354 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் முழுமையாகவும் 11 ஆயிரத்து 16 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

இதன் மூலம், பிக் (Pick) எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ்  செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 4 கோடி 89 லட்சத்து 44 ஆயிரத்து 761 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில்  15 லட்சத்து 33 ஆயிரத்து 774 பேர் அல்லது 48.7 விழுக்காட்டினர் வயதினர் தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்டனர்.  25 லட்சத்து 47 ஆயிரத்து 162 பேர் அல்லது 80.9 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதனிடையே, நேற்று 8,177 ஊக்கத் தடுப்பூசி நேற்று செலுத்தப்பட்டன. இதன் மூலம்,  ஊக்கத் தடுப்பூசி பெற்றவர்களின்  மொத்த எண்ணிக்கை 93 ஆயிரத்து 151 ஆக உயர்ந்துள்ளது.

 


Pengarang :