HEALTHMEDIA STATEMENTPBTSELANGOR

வார இறுதியில் மேலும் இரு இடங்களில் இளையோருக்கான தடுப்பூசித் திட்டம் 

ஷா ஆலம், அக் 28- சிலாங்கூரிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோருக்கான செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் வரும் சனிக்கிழமை டாமன்சாரா, அப்பார்ட்மெண்ட் புளோரா, ஜி. புளோக் சமூக மண்டபத்தில்  நடைபெறும்.

இதே போன்ற மற்றொரு நிகழ்வு பண்டமாரான் விளையாட்டு மையத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா சமூக ஊடங்களில் வெளியிட்டுள்ள விளக்கப் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசித் திட்டம் உள்நாட்டினர் மற்றும் அந்நியப் பிரஜைகளை மையமாக கொண்டு நடத்தப்படுகிறது. முதலாவது டோஸ் தடுப்பூசியை இன்னும் பெறாதவர்கள் மற்றும் செல்வேக்ஸ் திட்டத்தில் இரண்டாவது தடுப்பூசி பெறுவதற்கான தேதியை தவறவிட்டவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இத்திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் VAX எனும் பட்டனை அழுத்தி சரியான பற்றுச் சீட்டு குறியீட்டை செலுத்துவதன் மூலம் செலங்கா செயலியில் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

சிலாங்கூரில் இளையோருக்கான செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்திற்காக 150,000 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ள வேளையில்  இத்திட்டத்தை மேற்கொள்ள சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த 7 ஆம் தேதி கூறியிருந்தார்.

கடந்த 24 ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்படும் இந்த செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தின் வாயிலாக சுமார் 10,000 இளையோருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 


Pengarang :