ECONOMYMEDIA STATEMENTNATIONAL

60 வெளிநாட்டினரை புதர்களுக்குள் மறைத்து வைத்திருந்தவர் கைது.

ஷா ஆலம், 6 நவ: கோலாசிலாங்கூரில் உள்ள கம்போங் சுங்கை ஜங்குட்டில் நேற்று ஒப் பென்டெங் கோவிட்-19 மூலம் சட்டவிரோதமாக குடியேறியவர்களை உள்ளூர் நில உரிமையாளர் ஒருவர் மறைத்து வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

அதிகாலை 5 மணியளவில் 37 வயதுடைய அந்நபர் கைது செய்யப்பட்டதாக பொது நடவடிக்கைப் படையின் (PGA) பட்டாலியன் 4 இன் கட்டளை அதிகாரி கண்காணிப்பாளர் ரிசல் மொஹமட் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, புதருக்குள் பதுங்கியிருந்த 16 முதல் 51 வயதுக்குட்பட்ட 38 ஆண்கள் மற்றும் 22 பெண்கள் அடங்கிய 60 சட்டவிரோத குடியேறிகளை அவர்கள் கண்டு பிடித்தனர்.

“எல்லா நபர்களும் செல்லுபடியாகும் பயண ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறிவிட்டனர், மேலும் நடவடிக்கைக்காக தடுத்து வைக்கப் பட்டனர். “அவர்கள் இப்போதுதான் நாட்டிற்கு சட்டவிரோத பாதையில், அதாவது படகு மூலம் கடல் வழியாக வந்ததாக நம்பப்படுகிறது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கோலா சிலாங்கூர் மாவட்ட காவல்துறை தலைமையகத்துடன் (IPD) மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், ஒரு வாகனம், இரண்டு யூனிட் மொபைல் போன்கள் மற்றும் RM147 ரொக்கமும் கைப்பற்றப் பட்டதாக ரிசால் கூறினார்.

குற்றவாளிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடையே வைரஸ் பரவுவதைத் தடுக்க அனைத்து கைதுகளும் கோவிட் -19 ஸ்கிரீனிங்கிற்கு உட்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

 


Pengarang :