ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ரவாங் தொகுதியில் இன்று முதல் ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் விநியோகம்

ஷா ஆலம், நவ 8- மூத்த குடிமக்கள் பரிவு உதவித் திட்டத்திற்கு (எம்.எஸ்.யு.இ.) ரவாங் தொகுதி சேவை மையத்தில் பதிந்து கொண்டவர்களுக்கு இன்று முதல் ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் விநியோகிக்கப்படும்.

ஜூலை முதல் டிசம்பவர் வரை பிறந்த 21 வயதுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் தலா 100 வெள்ளிக்கான பற்றுச் சீடுகளை பெற வகை செய்யும் இத்திட்டத்தின் வழி தொகுதியைச் சேர்ந்த 3,387 பேர் பயன்பெறுவர் என்று தொகுதி உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார்.

இவ்வாண்டு தொடக்கம் முதல் அமல்படுத்தப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக இந்த பற்றுச் சீட்டுகளை விநியோகிக்கும் பணி தடைபட்டிருந்ததாக அவர் சொன்னார்.

இந்த பற்றுச் சீட்டுகளைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட பேரங்காடிகளில் 100 வெள்ளி பெறுமானமுள்ள அத்தியாவசிய உணவுப் பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பினை இத்திட்ட பங்கேற்பாளர்கள் பெறுவர் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த  2019 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட மரண சகாய நிதித் திட்டம் மீண்டும் தொடரப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்தாண்டு அக்டோபர் மாதம் கூறியிருந்தார்.

யாவாஸ் அறவாரியத்தில் பதிவு செய்து கொண்டவர்களின் குடும்பத்தினருக்கு மரண சகாய நிதியாக தலா 500 வெள்ளி வழங்குவதற்கு வகை செய்யும் இத்திட்டத்திற்காக 75 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.


Pengarang :