Speaker Dewan Negeri Selangor, Ng Suee Lim. Foto:
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

சிகிஞ்சான் தொகுதியில் 100 பேருக்கு இலவச சிம் கார்டுகள் விநியோகம்

ஷா ஆலம், நவ 8- சிகிஞ்சான் தொகுதியில் 100 பேருக்கு இலவச இணைய தரவு சேவைக்கான சிம் கார்டுகளை விநியோகிக்கும் பணி முற்றுப் பெற்று விட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

இந்த சிம் கார்டுகளைப் பெறுவோர் ஓராண்டிற்கு இலவச இணைய சேவையைப் பெறுவதற்கு உண்டாகும் செலவைஎம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகம் ஏற்றுக் கொண்டுள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இங் சுயி லிம் கூறினார்.

இந்த இலவச இணைய சேவைத் திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறும் குடுங்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயன்ப பெற முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

இது தவிர விவசாயிகளுக்கும் இத்தகைய  இலவச சிம் கார்டுகளை விநியோகிக்கும் பணி கடந்த மூன்று வாரங்களாக கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்திற்கு பொதுமக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சிம் கார்டுகள் வழங்கப்பட்டது குறித்து அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் என்றார் அவர்.

செல்கோம், டிஜி, யுனிபை நிறுவனங்களின் சிம் கார்டுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படுவதாக கூறிய அவர், இணைய சேவை தேவைப்படுவோருக்கு மாநில அரசின் இந்த உதவி பெரிதும் துணை புரிவதோடு அவர்களின் சுமையையும் குறைக்க உதவுகிறது என்றார்.

மாணவர்கள், விவசாயிகள், குறைந்த வருமானம் பெறுவோர், டியூஷன் ராக்யாட் மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பயன் பெறும் வகையில் 70,000 இலவச இணைய தரவு சேவைக்கான சிம் கார்டுகள் விநியோகிக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியிருந்தார். 

 


Pengarang :