ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

சிலாங்கூர் அரசின் இலக்கவியல் திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் ஆதரவளிக்க வேண்டும்

 ஷா ஆலம், நவ 9- வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் சிலாங்கூரை இலக்கவியல் மாநிலமாக்கும் திட்டத்திற்கேற்ப  முடிவுகளை எடுப்பதில் மாநில அரசு ஊழியர்கள் இலக்கவியலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்திட்டத்தை இலக்காக கொண்டுள்ள மாநில அரசுக்கு அரசு ஊழியர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து அதனுடன் இணைந்து செல்ல வேண்டும் என்று மாநில அரசு செயலாளர் டத்தோ ஹரிஸ் காசிம் கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்று காலத்தில் பலர் இணைய சேவைக்கு மாறியதோடு சிலாங்கூர் அரசும் வர்த்தகர்களுக்கு உதவ இ-டாப்போர் மற்றும் இ-பஸார் ராயா திட்டங்களை அறிமுகப்படுத்தியது என்றார் அவர். அரசு ஊழியர்களாகிய நாம் மக்களின் துடிப்பை அறிந்தவர்களாக இருப்பதற்கு ஏதுவாக அரசாங்கக் கொள்கைக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

“சிலாங்கூரில் பொருளாதார உற்பத்தி, வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த இது போன்ற திட்டங்கள் மிகவும் முக்கியமானவையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். நேற்று  இங்குள்ள ஜூப்ளி பேராக் மண்டபத்தில் நடைபெற்ற  அரசு ஊழியர்களின்  கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், அரசு ஊழியர்கள் தங்கள் சொந்த நலனுக்காக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். முறைகேடு அல்லது அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் எந்த ஒரு அரசு அதிகாரியுடனும் சமரசம் செய்து கொள்ள மாடாடோம் எனவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.


Pengarang :