ECONOMYMEDIA STATEMENTPBT

உலு சிலாங்கூரில் வேலை வாய்ப்புச் சந்தை- 28 பேர் வேலை பெற்றனர்

ஷா ஆலம், நவ 9- உலு சிலாங்கூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற வேலை வாய்ப்புச் சந்தையின் மூன்றாம் கட்டத் தொடரில் 28 பேர் வேலை வாய்ப்பினைப் பெற்றனர். ஒன்பது நிறுவனங்கள் அந்த வேலை வாய்ப்பினை அவர்களுக்கு வழங்கியதாக இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

இந்த வேலை வாய்ப்புச் சந்தை மூலம் வேலை பெற்றவர்கள் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்வதன் மூலம் பொருளாதார மேம்பாட்டிற்கு தங்களின் பங்களிப்பை வழங்கவும் வேலையில்லாப் பிரச்சனையை குறைக்கவும் இயலும் என்று அவர் தெரிவித்தார். இதனிடையே, இந்த வேலை வாய்ப்புச் இந்த சந்தையில்  25 முதலாளிகள் பங்கேற்ற வேளையில் 143 நேர்முகப் பேட்டியில் கலந்து கொண்டனர்.

அவர்களில் 95 பேர் இரண்டாம் கட்ட நேர்முகப் பேட்டிக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர். மாநிலத்தின பல்வேறு மாவட்டங்களில் இம்மாதம் 23 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 27 ஆம் தேதி வரை நடைபெறும் வேலை வாய்ப்புச் சந்தையில் 25,000 பேருக்கு வேலை கிடைப்பது உறுதி செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த வேலை வாய்ப்புச் சந்தை வரும் 13 ஆம் தேதி கோல லங்காட்டிலும் 20 ஆம் தேதி பெட்டாலிங்கிலும் 27 ஆம் தேதி ஷா ஆலமிலும் நடைபெறும். இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் பங்கு பெற விரும்புவோர் http://www.selangorbekerja.com.my. என்ற அகப்பக்கம் வாயிலாக பதிவு செய்யலாம்.


Pengarang :