ECONOMYHEALTHMEDIA STATEMENTPBTSELANGOR

2022 பட்ஜெட்டில் பொது சுகாதாரத்திற்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்- சித்தி மரியா நம்பிக்கை

ஷா ஆலம், நவ 11- வரும் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் பொது சுகாதாரத் துறை மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல புதிய திட்டங்களை அமல்படுத்துவற்கு ஏதுவாக அத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

மன நல பாதிப்பை எதிர்நோக்கியவர்கள் ஆலோசக சேவையைப் பெறுவதற்கு ஏதுவாக சேஹாட் எனப்படும் சிலாங்கூர் மன நல திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வது மற்றும் மாநிலத்தில் சுகாதார நடவடிக்கைகளை இலக்கவியல் மயமாக்குவது ஆகியவையும் அதில் அடங்கும் என்று அவர் சொன்னார்.

இருதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்சனை போன்ற தொற்றா நோய்களைத் தடுப்பதில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்க விரும்புகிறோம்.

கோவிட்.19 பெருந்தொற்றால் கடும் விளைவுகளை எதிர்நோக்கியவர்களில்  பலர் இத்தகைய தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களாவர், உடலாரோக்கியத்தை பாதுகாப்பதன் அவசியத்தை பொதுமக்களுக்கு வலியுறுத்த நாங்கள் விரும்புகிறோம், அதே சமயம், நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகும் என்றார் அவர்.

சிலாங்கூர் மாநிலத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் வரும் 26 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.


Pengarang :