Sukarelawan Team Selangor bersemangt untuk menghantar bakul makanan kepada DUN di bawah Parlimen Kuala Selangor yang dilancarkan oleh ADN Bukit Melawati Juwairiya Zulkifli sempena Program Let’s Ride & Help (LetsGo) di Dataran Malawati, Kuala Selangor pada 24 Oktober 2021. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI
ACTIVITIES AND ADSECONOMYSELANGOR

டீம் சிலாங்கூர் ஏற்பாட்டில் 2,000 உணவுக் கூடைகள் விநியோகம்

ஷா ஆலம், நவ 13- இவ்வாண்டு ஆகஸ்டு முதல் அக்டோபர் வரை மாநிலத்தின் 20 தொகுதிகளில் உள்ள வசதி குறைந்தோருக்கு  2,000 உணவுக் கூடைகளை டீம் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்பு வழங்கியுள்ளது.

இந்நோக்கத்திற்காக தாங்கள் 110,000 வெள்ளியை செலவிட்டுள்ளதாக டீம் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்புச் செயலகத்தின் தலைவர் ஷியாய்செல் கெமான் கூறினார்.

தலா 55 வெள்ளி மதிப்பிலான அந்த உணவுக் கூடைகளில் ஐந்து கிலோ அரிசி, சார்டின், பிஸ்கட், கிச்சாப், மேகிமீ மற்றும் 99 ஸ்பீட்மார்ட் கடைகளில் பொருள்களை வாங்குவதற்கான 30 வெள்ளி பற்றுச்சீட்டு ஆகியவை வைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை சொந்தமாக வாங்கிக் கொள்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு  பற்றுச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டு இறுதிக்குள்ள 3,000 உணவுப் கூடைகளை விநியோகிக்க தாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் 24 ஆம்  தேதியன்று, ஆறு தொகுதிகளில் கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டீம் சிலாங்கூர் 600 உணவுக் கூடைகளை விநியோகம் செய்தது.


Pengarang :