ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

டிசம்பர் 18 ஆம் தேதி சரவா மாநிலத் தேர்தல்- டிச. 6 இல் வேட்புமனுத் தாக்கல்

கூச்சிங், நவ 24 - சரவாக் மாநிலத்தின் 12வது தேர்தல் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோ அப்துல் கானி சலே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 6ஆம் தேதியும், முன்கூட்டியே வாக்குப்பதிவு டிசம்பர் 14ஆம் தேதியும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோ அப்துல் கனி சாலே கூறினார். 

சரவா மாநில தேர்தல் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இவ்வாண்டு ஜூன் 6 ஆம் தேதி மாநில சட்டமன்றத்தின்  தவணைக் காலம் முடிவடைந்தது. எனினும், அவசர காலம் அப்போது அமலில் இருந்ததால்  தேர்தலை  நடத்த முடியவில்லை.

கோவிட்-19 நோய்ப் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக நாட்டில் அவசரகாலத்தை மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா கடந்த ஜனவரி 11 ஆம் தேதி பிரகடனம் செய்தார்.

ஆகஸ்டு முதல்  தேதி நாடு தழுவிய அவசரநிலை முடிவடைந்தபோது, ​​ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 2022  ஆம் ஆண்டு பிப்ரவரி வரை சரவாக்கிற்கு அவசரகால நிலையை மாமன்னர் பிரகடனம் செய்தார். இந்த அவசரநிலை நவம்பர் 3 ஆம் தேதி  நீக்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து சரவா மாநிலத்தில்  தேர்தல் நடத்தப்படுகிறது.

Pengarang :