ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

சிலாங்கூர் பட்ஜெட் 2022ல் சவாலை படிப்பினையாக கொண்டு முன்னேற அழைப்பு விட்டார் மந்திரி புசார்.

ஷா ஆலம் 26 நவ;- சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று வெள்ளிக்கிழமை நவம்பர்  26 ம் தேதி மாலை 3.00 மணிக்கு, மாநில சட்டமன்றத்தில் 2022 ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை சமர்பித்தார்.

அதில்  அவர் உரையாற்றும் பொழுது கடந்த ஆண்டு மதிப்பு மிக்க  அவையில் சிலாங்கூர் மாநில பட்ஜெட்டை நான் சமர்ப்பித்தபோது, ​​கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்பில் உலகம் முழுவதும் மூழ்கி இருந்தது,  பார்வைக்கு இது முடிவே இல்லாதது போன்று இருந்தது என்றார்

அந்த நேரத்தில், கோவிட்-19 தடுப்பூசியை இந்த ஆண்டு இறுதிக்குள் தயாரித்து உலகின் பெரும்பாலான சமூகங்களும், நாடும் பெறுமா? அதனை நாம் சிலாங்கூர் மாநிலத்திற்கு வழங்க முடியும் என்று கூட நினைக்கவில்லை.

கடவுல் செயலில் மக்களின் விடாமுயற்சியும் ஆக்கத்தன்மையும்  சிலாங்கூர் குடிமக்களுக்கு தடுப்பூசி போடும் இலக்கை குறுகிய காலத்தில் அடைந்தோம். இருப்பினும், நாம் மெத்தனமாக இருக்கக்கூடாது.

கோவிட்-19 தொற்றுநோயை அப்படியே ஒழிக்க முடியாது என்பதையும், இந்த ஆண்டு ஆகஸ்டில் இந்த மண்டபத்தில் நான் வலியுறுத்தியபடி, ஒரு சர்வதேச தொற்றை நோக்கி நாம் நகர்ந்து வருவதை இப்போது நாம் காணலாம் என்றார்..

கோவிட் நோய்தொற்று முழு சமூகத்தின்  நீண்ட கால வாழ்க்கை முறையை மாற்றுகிறது. கடந்த ஆண்டு முதல் மத்திய அரசு விதித்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (PKP) காரணமாக சிலாங்கூர் மக்கள்  முழுவதுமாக வீட்டிலேயே வாழ்ந்தனர்.

இந்த நடமாட்ட கட்டுப்பாடு ஆணைக் காலத்தில் (பிகேபி) நமக்கு ஏற்பட்ட சோதனைகள், நம்மை அதிகம் பக்குவப்படுத்தியது. நமது வாழ்வின் அனைத்து அம்சங்களும் சோதிக்கப்பட்டு, மேம்படுத்தப் படுகின்றன.

எவ்வளவு பெரிய சவாலாக இருந்தாலும், அவைகளை படிப்பினையாக கொண்டு பொறுமை, விடாமுயற்சி, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் சோதனைகளை கடப்போம்.

சிலாங்கூர் மாநிலத்திற்கும் இது பொருந்தும் தொற்றுநோயின் தாக்கங்கள் மற்றும் திருப்பங்கள் மாநில அரசாங்கத்தின் பின்னடைவுக்கு அதிக அழுத்தத்தை தந்தது, தொற்றுநோயால் எழும் பிரச்சினைகளை ஒதுக்கி முன்னோக்கிச் செல்லவும் தீர்வுகளைக் கண்டறியவும் நாம் வலியுறுத்தப்பட்டோம்.


Pengarang :