ECONOMYHEALTHPBT

இரு நீர் சேகரிப்பு குளங்களை அமைக்க ஜே.பி.எஸ் வெ.3.5 கோடி ஒதுக்கீடு

ஷா ஆலம், நவ 26- கோம்பாக், சுங்கை கோங் மற்றும் மேரு, கம்போங் புடிமானில் வெள்ள நீர் சேகரிப்பு குளங்களை அமைக்க சிலாங்கூர் மாநில வடிகால் மற்றும் நீர் பாசனத்துறை (ஜே.பி.எஸ்.) 35 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

ரவாங் ஒருங்கிணைந்த வெள்ள நீர் சேகரிப்பு குளத்தை அமைப்பதற்கு 1 கோடியே 50 லட்சம் வெள்ளியும் கம்போங் புடிமானில் இதே போன்ற குளத்தை நிர்மாணிக்க 2 கோடி வெள்ளியும் செலவிடப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இது தவிர, 15 லட்சம் வெள்ளி செலவில் சுங்கை பெசார் பகுதியில் பிஸ்மா எனப்படும் சுற்றுச்சூழல் நட்புறவு பெருந்திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :