Dato’ Menteri Besar, Dato’ Seri Amirudin Shari (tengah), bersama Ahli Dewan Negeri Selangor (ADUN) Sentosa, Dr Gunarajah George (kanan) dan Pengasas Persatuan Kebajikan Love and Care Selangor, Tan Sri Dato’ Lim Soon Peng (dua, kiri), menyampaikan pek keperluan asas kepada penduduk ketika program pengedaran barangan asas anjuran DUN Sentosa di Taman Sri Mewah, Klang pada 14 Ogos 2021.Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
HEALTHMEDIA STATEMENTPBTSELANGOR

சிலாங்கூர்  சமூக நலத் திட்டங்களுக்கு 6. 52 கோடி ரிங்கிட்

ஷா ஆலம் 5.நவ ;-சிலாங்கூர் மக்களுக்கு அடுத்த ஆண்டில் பல்வேறு சமூக நல திட்டங்களை அமல்படுத்துவதற்காக   மாநில அரசாங்கம்   6 கோடியே  52லட்சத்து  50,000 ரிங்கிட்டை  ஒதுக்கியுள்ளது.  பரிவு மிக்க அரசாங்கத்தின்  நிரந்தர குழு,   வீடுகள் சீரமைப்பு மற்றும் புதிதாக வீடுகள்  கட்டும் திட்டத்திற்கு  கூடுதலாக ஒதுக்கிய   12 லம்சம் ரிங்கிட் தொகையுடன்  மொத்தம்  20 லட்சம் ரிங்கிட்  ஒதுக்கப்பட்டுள்ளதாக  மந்திரிபுசார் டத்தோஸ்ரீ  அமிருடின் ஷாரி  தெரிவித்தார்.  

இந்த கூடுதல் ஒதுக்கீட்டின் மூலம்  அதிகமானோருக்கு சமூக பொருளாதார  மீட்சிக்கு  உதவ முடியும் என  அவர் கூறினார்.   B40  குறைந்த வருமானம் பெறும்  தரப்பினருக்கு வசதியான   மற்றும் பாதுகாப்பைக் கொண்ட  வீடுகளில் குடியிருப்பதற்கு  சிலாங்கூர் அரசாங்கம் உதவும் என அமிருடின் தெரிவித்தார்.
மேலும் திறளை மேம்படுத்திக் கொள்வதற்கான  குறுகிய மற்றும்  நடுத்தர   கால  பயிற்சிகளை  வழங்கி  மக்களின்  கல்வித் தரத்தை  உயர்த்துவதற்கான  திட்டத்தையும் அரசாங்கம்  அமல்படுத்தும் . 

இதுதவிர  ஏழ்மையை துடைத்தொழிப்பதற்கான உதவிக்காக  20 லட்சம் ரிங்கிட்டும்  ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு  விண்ணப்பத்ற்கும்  10,000 ரிங்கிட்   உதவியை பெறமுடியும் என  அமிருடின்  ஷாரி தெரிரிவித்தார்.

Pengarang :