ECONOMYMEDIA STATEMENTPBT

சிலாங்கூர்  தொழிலாளர்களுக்கான  வீடமைப்பு தொகுதி

ஷா ஆலம் நவ 29;  சிலாங்கூர் தொழிலாளர்களுக்கான வீடமைப்பு தொகுதியை நிர்மாணிக்கும் முயற்சிகளை   PKNS  மூலம்   சிலாங்கூர் தொடங்க விருக்கிறது.  முழுமையான,முறையான, சிறந்த நிர்வாகம் மற்றும் பாதுகாப்புடன்  வீடமைப்பு வசதிகளை  ஏற்படுத்தும் அடிப்படை  மனித உரிமைக்கு ஏற்ப   இந்த திட்டம் அமைகிறது.

புதிய பொருளாதார துறைகளை வலுப்படுத்துவதன்  மூலம் வெளிநாட்டு தொழிலாளர்கள் மீதான தவறான புரிந்துணர்வை குறைக்க முடியும் தவறான  புரிந்துணர்வை  குறைக்க முடியும்.  இதன்வழி  சமூக மற்றும் சுகாதார விவகாரங்களை  தீர்ப்பதோடு    கோவிட்   -19  தொற்று காலத்திற்கு  பிறகு  பொருளாதார  துறைகளை  துரிதப்படுத்த  முடியும்.

1990 ஆம் ஆண்டின்   குறைந்த பட்ச ,  தரமான  வீடமைப்பு, தங்கும் வசதி  மற்றும்  (  446  சட்டத்தை ) நிறைவு செய்யும் முயற்சியாக இது அமைகிறது.  இத்திட்டத்திற்காக இதுவரை    145 ஏக்கர்  நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. சிலாங்கூர் அரசாங்கத்திற்கு சொந்தமான   59 ஏக்கர் நிலமும், சிலாங்கூர் மேம்பாட்டு கழகம் என்னும் P.K.N.S  86  ஏக்கர் நிலமும் அடையாளம் கண்டுள்ளன.

இதன்வழி  60,000 தொழிலாளர்களுக்கான வீடுகளை  உருவாக்க முடியும். பெட்டாலிங், கிள்ளான்,   உலுலங்காட், கோம்பாக்,  கோலா லங்காட், கோலாசிலாங்கூர், உலு சிலாங்கூர், சபா பெர்ணம் ஆகிய இடங்களில்  தொழிலாளர் குடியிருப்பு வசதிக்கான நிலம் அடையாளம் காணப்பட்டுள்ன.  பொது மற்றும்  தனியார் துறையின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்படும்    இந்திட்டத்திற்கு தொடக்க கட்டமாக  50 லட்சம் ரிங்கிட்  ஒதுக்கப்பட்டுள்ளது.

 


Pengarang :