ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

116 பேருக்கு சுல்தான் பட்டங்களை வழங்கினார்

கிள்ளான், நவ 29- மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடீன் இட்ரிஸ் ஷா  தனது 75வது பிறந்தநாளை முன்னிட்டு  116 பேருக்கு விருதுகளையும்  பதக்கங்களையும் வழங்கினார் . இஸ்தானா ஆலம் ஷாவில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வில் தெங்கு பெர்மைசூரி சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் மற்றும் சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா சுல்தான் ஷராபுடீன் இட்ரிஸ் ஷா ஆகியோரும்  கலந்து கொண்டனர்.

மலேசிய தேசிய செய்தி நிறுவனத்தின் (பெர்னாமா) நிர்வாக ஆசிரியர் ஹர்லினா சாம்சன் மற்றும் தி ஸ்டார் மீடியா குழுமத்தின் தலைமை நிருபர் எட்வர்ட் ராஜேந்திரா ஜே.எஸ். ஹென்றி  உள்பட 28 பேர் டர்ஜா கெபெசாரன் செத்தியா-சுல்தான் ஷராபுடீன் இட்ரிஸ் ஷா (எஸ்.ஐ எஸ்.) விருதைப் பெற்றனர்.

டர்ஜா கெபெசாரன் அஹ்லி மஹ்கோத்தா சிலாங்கூர் (ஏ.எம்.எஸ்.) மற்றும் டர்ஜா கெபெசாரன் அஹ்லி-சுல்தான் ஷராபுடீன் இட்ரிஸ் ஷா (ஏ ஐ.எஸ்.) விருதுகளை   39 பேர் பெற்றனர்.

மேலும் 10 பேருக்கு பிந்தாங் பெர்ஹிட்மாத்தான் செமர்லாங் விருது வழங்கப்பட்டது. கடந்த சனிக்கிழமையன்று இங்கு நடைபெற்ற நிகழ்வில் 57 பேருக்கு உயரிய விருதுகளும் பட்டஙகளும் வழங்கப்பட்டன. கோவிட்-19 பரவலைத் தடுக்கும் வகையில்  கடுமையான எஸ்.ஒ.பி. விதிமுறைகளுடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.


Pengarang :