ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

17 அரசாங்க, தனியார் உயர்கல்விக் கூடங்களுக்கு வெ.85,000 மானியம்- சிலாங்கூர் அரசு ஒதுக்கீடு

கிள்ளான், நவ 30- கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு பிந்தைய திட்டங்களை ஏற்பாடு செய்வதற்காக சிலாங்கூரிலுள்ள 17 அரசாங்க மற்றும் தனியார் உயர்கல்விக் கூடங்களுக்கு மாநில அரசு 85,000 வெள்ளியை  ஒதுக்கீடு செய்துள்ளது.

“கித்தா சிலாங்கூர் வரவு செலவுத் திட்டம் 2022- மனுக்குலத்தின் மாண்பைக் காப்பதில் சோதனைகளைத் தாங்கும் மாநிலம்“ என்ற கருப்பொருளுக்கேற்பவும் சம்பந்தப்பட்ட உயர்கல்விக் கூடங்களுக்கு ஆதரவை புலப்படுத்தும் விதமாகவும் இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ  அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த திட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட 17 உயர்கல்விக் கூடங்களுக்கும் தலா 5,000 வெள்ளி வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

பரிவுமிக் மாநிலம் என்ற முறையில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உயர்கல்வி மாணவர்கள் உள்பட அனைத்துத் தரப்பினருக்கும் உதவி வழங்குவதில் சிலாங்கூர் அரசு எப்போதும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது என்று அவர் சொன்னார்.

சம்பந்தப்பட்ட உயர்கல்விக் கூடங்கள் பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவற்கு இந்த நிதியுதவி ஓரளவு துணை புரியும் என நம்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள விண்ட்ஹாம் தங்கும் விடுதில் நடைபெற்ற சிலாங்கூர் உயர்கல்விக் கூட மாணவர் தலைவர்களுடனான சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சிலாங்கூர் அரசுக்கும் உயர்கல்விக்கூட மாணவர் சங்கத் தலைவர்களுக்குமிடையே அணுக்கமான உறவை ஏற்படுத்தும் நோக்கில் இந்த கலந்துரையாடல் நிகழ்வு நடத்தப்பட்டது.


Pengarang :