ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTPENDIDIKAN

உயர்கல்வி மாணவர்களுடன் சிலாங்கூர் அரசு கலந்துரையாடல்

கிள்ளான், நவ 30- பட்டதாரி மாணவர்களுடன் கருத்துப் பறிமாற்றம் செய்து கொள்வதற்கு ஏதுவாக சிலாங்கூர் மாநில அரசு அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வுகளை நடத்தி வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாணவர்களுக்கும் மாநில அரசுக்குமிடையே அணுக்கமான நட்புறவை ஏற்படுத்துவதற்கும் மாநிலத்தின் மேம்பாட்டில் அவர்களின் பங்கேற்பை உறுதி செய்வதற்கும் ஏதுவாக இத்தகைய கலந்துரையாடல் நிகழ்வுகள் நடத்தப்படுவதாக அவர் சொன்னார்.

இதற்கு முன்னர் பல முறை இதுபோன்ற கலந்துரையாடல் நிகழ்வுகளை நடத்தியுள்ளோம். மாணவர்களுடன் ஒன்று பட்டு செயல்படுவது மற்றும் அவர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்நிகழ்வுகளை நடத்துகிறோம் என்றார் அவர்.

நேற்று இங்கு சிலாங்கூர் மாநிலத்திலுள்ள உயர்கல்வி மாணவர் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

உயர்கல்வி மாணவர்கள் எல்லைகளைக் கடந்து சிந்திக்க வேண்டும் என்பதோடு எதிர்மறையான விஷயங்களையும் சில வேளைகளில் தரக்கூடிய சமூக ஊடகங்களின் ஆதிக்கத்திற்கு ஆட்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.


Pengarang :