ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

சிப்ஸ் உச்ச நிலை மாநாடு 25,000 வருகையாளர்களை ஈர்த்தது

ஷா ஆலம், நவ 30 - அண்மையில் முடிவடைந்த சிலாங்கூர் அனைத்துலக உச்சநிலை மாநாட்டின் நான்கு நாள் நிகழ்வுகளில் 25,000 பார்வையாளர்கள் பங்கேற்றதாக   டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

இந்த உச்ச நிலை மாநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்பது வெவ்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற உள்ளூர் மற்றும் அனைத்துலக பங்கேற்பாளர்களுக்கு  472 கண்காட்சிக்கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான அவர் கூறினார்.

இந்த சிப்ஸ் மாநாடு   www.selangorbusinesshub.my  என்ற மாநில அரசின் அதிகாரப்பூர்வ அகப்பக்கம் வாயிலாக இயங்கலை வழி அடுத்த12 மாதங்களுக்கு நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலக அரங்கில் சிலாங்கூரின் திறனை வெற்றிகரமாக நிலைநிறுத்தியதற்கு  ஆதாரமாக இந்த மாநாடு விளங்குகிறது. இந்த நிகழ்வு சிலாங்கூரை உலக வர்த்தக மையமாகவும், தென்கிழக்கு ஆசியப் பகுதிக்கான நுழைவாயிலாகவும் உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் அரசின் முயற்சியின் ஒரு பகுதியாகவும்  அமைந்துள்ளது  என்று சொன்னார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று சுங்கை ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ரிசாம் இஸ்மாயில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Pengarang :