ECONOMYHEALTHMEDIA STATEMENTPBTSELANGOR

செலங்கா செயலியின் இ-டெம்பேட் திட்டம் ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும்

கோலாலம்பூர், டிச 5- பாதுகாப்பான முறையில் பொது இடங்களில் நுழைவதை உறுதி செய்யும் செலங்கா செயலி இ-டெம்பெட் எனப்படும் மின் பணப்பை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்வழி தொடுதல் மற்றும் மனித தொடர்பை குறைத்து கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவலை தடுப்பதற்குரிய சூழலை ஏற்படுத்த முடியும் என்ற செல்கேட் ஹெல்த்கேர் நிறுவன தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் முவாஸ் ஓமார் கூறினார்.

நாடு விரைவில் எண்டமிக் கட்டத்திற்கு மாறுவதற்கு தயார் படுத்தும் வகையிலான இத்திட்டம் கடந்த மாதம் முதல் அமலில் இருந்து வருவதாக அவர் சொன்னார்.

செலங்கா உறுப்பினர்கள் ரொக்கமில்லா பரிவர்த்தனையை மேற்கொள்வதற்கு இந்த இ-டொம்பெட் செயலி உதவுகிறது. இதன் மூலம் தொடுதலை குறைத்து நோய்த் தொற்று பரவலையு தடுக்க முடியும் என்றார் அவர்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவலைத் தடுப்பதற்கு சிலாங்கூர் மாநில அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களில் ஒன்றாக இந்த இ-டொம்பெட் விளங்குவதாக நேற்று இங்கு இ-டொம்பெட் அறிமுக நிகழ்வில் அவர் கூறினார்.

தொலைத் தொடர்பு நிறுவனங்கள், பெர்கர் கிங், கே.கே. மார்ட். மற்றும் 99 ஸ்பீட்மார்ட் போன்ற வணிக மையங்களிலும் இந்த செயலியை பயன்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :