ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

தனித்து வாழும் தாய்மார்களுக்கான உதவித் திட்டம் ஒருமுகப்படுத்தப்படும்

ஷா ஆலம், டிச 7- “கிஸ் ஜ.டி.” எனப்படும் தனித்து வாழும் தாய்மார்களுக்கான ஸ்மார்ட் சிலாங்கூர் அன்னையர் பரிவுத் திட்டத்தின் கீழ் மேலும் அதிகமானோர் பயன்பெறுவதை உறுதி செய்வதற்காக அந்த  திட்டம் ஒருமுகப்படுத்தப்படும். இத்திட்டத்திற்கு 5,000 கோட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வேளையில் கடந்த அக்டோபர் மாதம் வரை 1,661 பேர் மட்டுமே உதவி பெற்றுள்ளதாக சமூக பொருளாதார மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

உதவி பெறத் தகுதியுள்ள நிறைய பேர் வெளியில் உள்ளனர். இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வோர் உண்மையில் தனித்து வாழும் தாய்மார் என்பதை உறுதிப்படுத்தும் அதேவேளையில் வருமானம் மற்றும் குடும்ப நிலை தொடர்பான கூடுதல் ஆவணங்களையும் அவர்கள் சமர்பிக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

அடுத்தாண்டில் இத்திட்டம் சிலாங்கூர் நல்வாழ்வுத் திட்டம் (பிங்காஸ்) என்ற பெயரில் தரம் உயர்த்தப்படவுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார். மாநில சட்டமன்றத்தில் இனறு இத்திட்டத்தில் குறைவான பங்கேற்பு  குறித்து பத்தாங் காலி உறுப்பினர் ஹருமாய்னி ஓமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இவ்வாறு கூறினார்.

சிலாங்கூரில் நகர்ப்புற ஏழ்மை மற்றும் தனித்து வாழும் தாய்மார்கள் குறித்த கேள்விக்கு, சமூகநல இலாகாவின் வசம் இதன் தொடர்பான இல்லை என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :