ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

எஸ்.ஒ.பி.விதிகளை மீறினால் வெ. 10 லட்சம் வரை அபராதம்- சட்டத்தில் திருத்தம்

கோலாலம்பூர், டிச 13 - கோவிட்-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (எஸ்.ஒ.பி.) மீறும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு 10 லட்சம் வெள்ளி வரை அபராதம் விதிக்கும் வகையில்  1998 ஆம் ஆண்டு தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டம் (சட்டம் 342) திருத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடீன் கூறினார்.

வரும் வியாழன் அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படவிருக்கும் சட்டத் திருத்தங்களில் இந்த அபராதத் தொகை அதிகரிப்பும் அடங்கும் என்று அவர் சொன்னார்.
 இக்குற்றங்களைத் தொடர்ந்து புரிவோருக்குக்கு மதிப்பீட்டின் அடிப்படையில் மேலும் கூடுதலாக அபராதம் விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தற்போது, ​​இக்குற்றங்களைப் புரியும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது விதிக்கப்படும் அதிகபட்ச தொகை  50,000 வெள்ளி ஆகும் என்றார் அவர்.

தனிநபர்களுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச அபராதத் தொகையின்  அளவு 10,000 வெள்ளியாக இருக்கும் என்று ஆர்.டி.எம்.மில் ஒளிபரப்பான சிறப்பு விவாத நிகழ்வில் அவர் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

 சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மட்டுமின்றி ஊராட்சி மன்ற அதிகாரிகளும் அமலாக்கத்தை மேற்கொள்ளும் அதிகாரத்தை உள்ளடக்கிய வகையில் இந்த திருத்தங்கள் அமையும் கைரி கூறினார்.

கோவிட்-19 தொற்றுநோயை கட்டுப்படுத்தும் முயற்சிகளைச் செயல்படுத்துவதன் மூலம் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அமைச்சு எப்போதும் உறுதியுடன் இருப்பதாக அவர் வலியுறுத்தினார். 

மேலும், பொதுமக்கள் நிர்ணயிக்கப்பட்ட எஸ்.ஒ.பி. விதிமுறைகளை   தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறினார்.

கள் தங்கள் கடைகளுக்குள் நுழைவதற்கு முன்பு ஸ்கேன் செய்ய MySejahtera QR குறியீட்டைத் தயாரிப்பதற்கு வணிக வளாகங்கள் பொறுப்பு.

Pengarang :