ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

ஊக்கத் தடுப்பூசித் திட்டத்திற்கு 6 தொகுதிகளில் தடுப்பூசி மையங்கள்

 ஷா ஆலம், டிச 15- சிலாங்கூர் அரசின் ஊக்கத் தடுப்பூசித் (செல்வேக்ஸ்) திட்டத்தை வெற்றியடையச் செய்ய ஆறு தொகுதிகளில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. ஸ்ரீ கெம்பாங்கான், தாமான் டெம்ப்ளர், ரவாங், பலாக்கோங், பண்டார் உத்தாமா, தஞ்சோங் சிப்பாட் ஆகிய தொகுதிகளில் இந்த தடுப்பூசி மையங்கள் அமைக்கப்டும் என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

பொது மக்கள் குறிப்பாக புறநகர்ப் பகுதிகளில்  உள்ளவர்கள் விரைவாக ஊக்கத் தடுப்பூசி பெறுவதை இத்திட்டம் எளிதாக்கும் என்று அவர் தெரிவித்தார். அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக தஞ்சோங் சிப்பாட், தாமான் டெம்ப்ளர் போன்ற சீனர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் ஊக்கத் தடுப்பூசி மையங்களை அமைக்க விண்ணப்பித்துள்ளனர்.

இத்தொகுதிகளில் செல்கேர் கிளினிக்குகள் இல்லாத காரணத்தால்  அங்கு தடுப்பூசி மையங்களை அமைக்க வேண்டியுள்ளது. இதற்கான செலவினத்தை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாராக உள்ளனர் என்றார் அவர்.

இந்த தடுப்பூசித் திட்டத்திற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனக் கூறிய அவர், இம்மையங்களில் தடுப்பூசி பெற விரும்புவோர் அவசியம் செலங்கா செயலியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்  சொன்னார்.


Pengarang :