ECONOMYHEALTHPBTSELANGOR

பொது மக்களுக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்தும் காக்கைகளை சுட எம்.பி.எஸ்.ஜே நடவடிக்கை

ஷா ஆலம், டிச 16- பொது மக்களுக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்துவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் காக்கைகளை சுடும் நடவடிக்கையை சுபாங் ஜெயா மாநகர் மன்றம் இவ்வாரம் சனிக்கிழமை மேற்கொள்ளவுள்ளது.

காக்கைகள் அதிகம் காணப்படும் இடங்களை இலக்காக கொண்ட இந்த நடவடிக்கை குடியிருப்பார் சங்க பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் காலை 7.00 மணி முதல் இரவு 9,00 மணி வரை மேற்கொள்ளப்படும் என்று மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் வியூக நிர்வாக துறையின் துணை இயக்குநர் அஸ்பரிஷால் அப்துல் ரஷிட் கூறினார்.

மாநகரின் அதிகாரத்திற்குற்பட்ட பகுதிகளில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை பேணும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

எனவே, சுபாங் ஜெயா வட்டார மக்கள் இந்த அறிவிப்பை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதோடு காக்கைகளை சுடும் இடங்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இதன் தொடர்பான மேல்  விபரங்களை https://mbsj.gov.my என்ற அகப்பக்கம் வாயிலாகவும்  சமூக ஊடகங்களின் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :