ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 113 பேர் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம்

ஷா ஆலம், டிச 18- ஜென்ஜாரோம், தெலுக் பங்ளிமா காராங் மற்றும் கோலக் கிள்ளானில் நேற்று மாலை ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 113 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

கம்போங் டேலேக் சமயப்பள்ளி, பூலாவ் இண்டா சமயப் பள்ளி மற்றும் தெலுக் கோங் தேசிய பள்ளி ஆகியவற்றில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோராஸாம் காமீஸ் கூறினார்.

தொடர் மழை காரணமாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஒரு மீட்டர் அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டது. தெலுக் கோங் கம்போங் நெலாயானில் மிக அதிகமாக அதாவது 106 பேர் பாதிக்கப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

பந்திங், ஜாலான் நங்கா மற்றும் தெலுக் பங்ளிமா காராங், தாமான் டத்தோ ஹொர்மாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களை  சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்  துணையினர் மீட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மீட்பு பணியை விரைந்து மேற்கொள்வதற்கு ஏதுவாக தாங்கள் தொடர்ச்சியாக கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.


Pengarang :