ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONALSELANGOR

பாடாங் ஜாவா  தேசிய பள்ளியில்  அமைக்கப் பட்டுள்ள  தற்காலிக முகாமிற்கு  மந்திரி புசார் வருகை 

ஷா ஆலம், டிச. 18: டத்தோ மந்திரி புசார் இன்றிரவு இங்கு  பாடாங் ஜாவா  தேசிய பள்ளியில்   அமைக்கப் பட்டுள்ள  தற்காலிக முகாமிற்கு   (பிபிஎஸ்) வருகையளித்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட குடும்பங்களை சந்தித்தார்.

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவசர தங்குமிட தற்காலிக முகாமில்  இருப்பவர்களுடன் உரையாடியப்பின்,  உதவி விநியோக செயல்முறை சீராக நடைபெறுவதையும்  பார்வையிட்டார்.

இந்த வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை காப்பாற்ற சிலாங்கூர் அரசாங்கம் கூட்டரசு சொத்து உதவி மற்றும் இராணுவ ஈடுபாட்டை நாடுகிறது என்றார் அவர்.

  • பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரியை தொடர்பு கொண்டு தனது விருப்பத்தை தெரிவித்ததாக டத்தோ மந்திரி புசார் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
  • “சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கோருவதற்காக நான் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் உடன் தொடர்பு கொண்டுள்ளேன் என தெரிவித்தார்
  • *இந்த நேரத்தில் சிக்கித் தவிக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை முடிந்தவரை மீட்க மத்திய அரசின் சொத்துக்களின் உதவியையும் ராணுவத்தின் ஈடுபாட்டையும் மாநில அரசு கோருகிறது” என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
  •  அமிருடின், மூத்த பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைனைத் தொடர்பு கொண்டு சொத்துக்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு உதவி கோரினார்.
  • தற்போது சிலாங்கூரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தை சமாளிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) மாநில அரசுக்கு உதவும் என்று நம்புகிறேன்” என்று அவர் தனது டுவிட்டரில் எழுதி உள்ளார்
  • சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கோம்பாக், பெட்டாலிங், கோலா லங்காட் மற்றும் உலு லங்காட் ஆகிய இடங்களில் கனமழை தொடரும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) எதிர்பார்க்கிறது.
  • உதவி தேவைப்படும் மக்களை, சிலாங்கூர் மாநில பேரிடர் மேலாண்மைப் பிரிவை 03-50350920 என்ற எண்ணில் அல்லது கீழே பட்டியலிடப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளவும் அவர் கேட்டுக் கொண்டார்.
  • கிள்ளான் நகராண்மை கழகம் -03-3374 8845
  • ஷா ஆலம் மாநகராட்சி-03-5522 2787
  • கோலா லங்காட் நகராண்மை கழகம்-03-31822566
  • தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை-03-3323 9478
  • கிள்ளான் மாவட்ட சுகாதார அலுவலகம்-03-3323 9554
  • கிள்ளான் செலத்தான் போலீஸ் தலைமையகம்-03-3372 2222
  • கிள்ளான் உத்தரா போலீஸ் தலைமையகம் -03-3291 3344
  • சமூக நலத்துறை-03-3341 3703
  • பொதுப்பணித்துறை-03-3371 4040
  • சிலாங்கூர் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை-03-3371 2464
  • குடிமைத் தற்காப்புப் படை-03-3371 0820

Pengarang :