ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONALSELANGOR

மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது ராணுவம் மற்றும் காவல்துறையை அழைக்க தனக்கு ஏன் அதிகாரமில்லை- மந்திரி புசார் விளக்கம்.

ஷா ஆலம், டிச. 21: டத்தோ மந்திரி புசார், சிலாங்கூர் தேசியப் பாதுகாப்புக் குழுவின் (எம்கேஎன்) தலைவராக தனக்கு அதிகாரம் இருந்திருந்தால், மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது ராணுவம் மற்றும் காவல்துறையை உடனடியாக தொடர்பு கொண்டிருப்பார்.

கடந்த மாதம் முதல் தான் (எம்கேஎன்)  தலைவராக இல்லை என்பதை தெரிவித்த டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி,  அமைச்சர் ஒருவரிடம் அந்த பதவி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

“நான் ஏன் (எம்கேஎன்) சிலாங்கூரின் தலைவராக இல்லை என்ற கேள்வி உள்ளது, ஏனென்றால் கடந்த நவம்பர் மாதத்தில் (எம்கேஎன்) சிலாங்கூரின் தலைவர் பொறுப்பு மத்திய அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று காலை தேசிய பாதுகாப்புக் குழுவின்  சிறப்பு கூட்டத்திற்கு தலைமை தாங்கும் முன் என்னை அழைத்தார், நாளை என்னை (எம் கே என்) சிலாங்கூருக்கு தலைமை வகிக்க பணித்தார் என அமிருடின் கூறினார்.

எம்கேஎன் மீண்டும் ஒருமுறை என்னை அழைத்தது, கடவுள் விரும்பினால், எதிர்கட்சிகள் உட்பட அனைத்து தரப்புகளையும் அழைத்து ஒருங்கிணைந்த பாதுகாப்புக் குழுவின் வழி மாநிலத்தில் மீட்டெடுப்பு செயல்முறையை  முன்னெடுப்பேன்,” என்று அவர் கூறியதாக  எஃப்எம்டி மேற்கோள் காட்டியது.


Pengarang :