ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

டீம் சிலாங்கூர் ஏற்பாட்டில் 2,500 உணவுப் பொட்டலங்கள் விநியோகம்

ஷா ஆலம், டிச 26- வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2,500 உணவுப் பொட்டலங்களை டீம் சிலாங்கூர் இன்றுவரை வழங்கியுள்ளது.

இந்த உணவை தயாரித்து வழங்கும் பணியில் 400 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளதாக டீம் சிலாங்கூர் செயலகத்தின் தலைவர் ஷியாய்ஷால் கெமான் கூறினார்.

உணவுகளை விநியோகிப்பது மற்றும் வீடுகளைச் சுத்தம் செய்வது ஆகிய பணிகளுக்காக மூன்று குழுக்களாக பிரிந்து செயல்பட்டு வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, பொதுமக்கள் தந்து உதவிய சக்கர நாற்காலிகள், பெம்பர்ஸ் மற்றும் பால் மாவு போன்றவற்றை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கும் பணியையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என்றார் அவர்.

இங்குள்ள கம்போங் லொம்போங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தற்காலிக நிவராண மையங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளும்படி டீம் சிலாங்கூர் உள்ளிட்ட தன்னார்வலர் அமைப்புகளுக்கு சிலாங்கூர் அரசு கடந்த 18ஆம் தேதி உத்தரவிட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிப் பொருள்களை விநியோகிக்கும் பணியில் டீம் சிலாங்கூர் ஈடுபடும் என்றும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியிருந்தார்.

 


Pengarang :