ALAM SEKITAR & CUACAECONOMYPBT

மின்சார சாதனங்களை இலவசமாக பழுதுபார்க்கும் சேவை- தாமான் ஸ்ரீமூடாவில் வழங்கப்படுகிறது

ஷா ஆலம், டிச 28- வெள்ளத்தால் பழுதடைந்த மின்சாரப் சாதனங்களை இலவசமாக பழுதுபார்க்கும் சேவை தாமான் ஸ்ரீமூடா, டேவான் அஸாலியாவில் வழங்கப்படுகிறது.

சிலாங்கூர் தொழில்திறன் மேம்பாட்டு மையம் மற்றும் உபகரண பழுதுபார்ப்பு சமூகத்தின் ஆதரவில் ஐந்து நாட்களுக்கு காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த சேவை வழங்கப்படும்.

ரைஸ் குக்கர், சுடுநீர் கேத்தல், முடி உலர்த்தும் சாதனம், வானொலி உள்ளிட்ட சாதனங்கள் இங்கு பழுதுபார்க்கப்படுவதாக ஷா ஆலம் மாநகர் மன்றம் வெளியிட்ட விளக்கப்படம் ஒன்று கூறியது.

இங்கு கொண்டு வரப்படும்  சாதனங்களின் பழுதை கண்டறிந்து சரி செய்து சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படும். உபரிபாகங்களுக்கான செலவை அதன் உரிமையாளர்களே ஏற்க வேண்டும்.

இச்சேவை தொடர்பில் மேல் விபரங்களைப் பெற விரும்புவோர் ஹிஷாம் (013-3315157), ரஹ்மாட் (012-7099628), ஷியாஹிட் (019-3676634) ஃபத்திமா (017-3038097) என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

சுமார் இரண்டு லட்சம் வெள்ளி மதிப்புள்ள இருதய சிகிச்சை இயந்திரம் உள்பட 200க்கும் மேற்பட்ட மின்சார சாதனங்கள் இங்கு இலவசமாக பழுதுபார்க்கப்பட்டுள்ளன.


Pengarang :