Sebahagian ibu bapa membawa anak mendaftar bagi menerima suntikan pelalian Covid – 19 ketika Progam Vaksinasi remaja dan murid berkeperluan khas Daerah Kuala Selangor di Stadium tertutup Kuala Selangor pada 29 September 2021. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

97.6 விழுக்காட்டு பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், டிச 29- நாட்டில் நேற்று வரை 2 கோடியே 28 லட்சத்து 46 ஆயிரத்து 708 பெரியவர்கள் அல்லது 97.6 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும் 2 கோடியே 31 லட்சத்து 42 ஆயிரத்து 519 பேர் அல்லது 98.9 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இது தவிர, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 87.4 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 49 ஆயிரத்து 975 பேர் இரண்டு டேஸ் தடுப்பூசியை முழுமையாகப்  பெற்றுள்ள வேளையில் 28 லட்சத்து 43 ஆயிரத்து 040 பேர்  அல்லது 90.4 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று மொத்தம் 153,228 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதில் 145,179 பேர் ஊக்கத் தடுப்பூசிகளையும் 4,653 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 3,396 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 71 லட்சத்து 12 ஆயிரத்து 114 ஆக உயர்ந்துள்ளது.

ஊக்கத் தடுப்பூசிகளைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 57 லட்சத்து 27 ஆயிரத்து 151 ஆகும்.


Pengarang :