ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

மூன்று கிழக்கு கரை மாநிலங்களில் நாளை வரை அடை மழை- வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

கோலாலம்பூர், டி 30– தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரை மாநிலங்களான கிளந்தான், திரங்கானு, பகாங் ஆகிய மாநிலங்களில் நாளை டிசம்பர் 31 ஆம் தேதி வரை அடைமழை இடைவிடாது பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிளந்தான் மாநிலத்தின் ஜெலி, திரங்கானுவின் கெமாமான், பகாங் மாநிலத்தின் குவாந்தான் ஆகிய பகுதிகளில் இந்த மோசமான வாலை நீடிக்கும் என்று அத்துறை இன்று பிற்பகல் 1.25 மணியளவில் இந்த எச்சரிக்கையை வெளியிட்டது.

மேலும், தானா மேரா, மாச்சாங், கோல கிராய், குவா மூசாங்,திரங்கானுவின் பெசுட், பகாங் மாநிலத்தின் ஜெராண்டுட், மாரான் மற்றும் பெக்கானில் ஜனவரி முதல் தேதி வரை அடைமழை தொடர்ந்து பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்றிரவு தொடங்கி கிளந்தான் மற்றும் திரங்கானுவின் பல பகுதிகளில் கட்டங் கட்டமாக வெள்ளம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக வடிகால் மற்றும் நீர் பாசனத் துறை கூறியது.

பகாங் மாநிலத்தின் சுங்கை குவாந்தான், சுங்கை ரொம்பின், சுங்கை பொந்தியான், சுங்கை எண்டாவ்  மற்றும் குவாந்தான், ரொம்பின் ஆகிய பகுதிகளில் கனத்த மழை ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.


Pengarang :