Majlis Perbandaran Klang dan KDEB Waste Management membersihkan sampah berupa manik dan tali tangsi yang dibakar oleh individu tidak bertanggungjawab di bahu jalan berhampiran taman perumahan di Sentosa pada 2 September 2020. Foto: ADN Sentosa
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

வெள்ளத்தில் குவிந்த குப்பைகளை எரிக்காதீர்- கோல லங்காட் நகராண்மைக்கழகம் அறிவுறுத்து

ஷா ஆலம், டிச 31– வெள்ளம் பாதிக்கப்பட்ட வீடுகளிலிருந்து அகற்றப்பட்டு பொது இடங்களில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை எரிக்க வேண்டாம் என பொதுமக்களை கோல லங்காட் மாவட்ட மன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தற்போது தாங்கள் கும்புலன் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வருவதாக அந்த நகராண்மைக்கழகம் அறிக்கை ஒன்றில் கூறியது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் வீசப்பட்ட வீட்டுத் தளவாடப் பொருள்கள், மெத்தைகள், மின்சார சாதனங்கள் உள்ளிட்ட பொருள்களுக்கு தீயிடும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என குடியிருப்பாளர்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என அது குறிப்பிட்டது.

கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து குப்பைகளை அகற்றும் பணியை தாங்கள் கட்டங் கட்டமாக மேற்கொண்டு வருவதாகவும் நகராண்மைக் கழகம் தெரிவித்தது.

மேல் விபரங்களுக்கு நகராண்மைக் கழகத்தின் திடக்கழிவு நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் சுகாதார துறையை 03-31803154 என்ற எண்களில் அல்லது கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மெண்ட்  நிறுவனத்தை 1-800-88-2824 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :