ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஸ்ரீ மூடாவில் குப்பைகளை அகற்ற 200 லோரிகள்

ஷா ஆலம், டிச 31– கடுமையான வெள்ளத்தால் பாதித்க்கப்பட்ட தாமான் ஸ்ரீ மூடாவில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதற்கு  பயன்படுத்தப்படும் லோரிகளின் எண்ணிக்கை 200 ஆக அதிகரிப்படும்.

மாநிலத்தில் குப்பைகளை அகற்றும் பணிக்கு பொறுப்பேற்றுள்ள கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மேண்ட் சென். பெர்ஹாட் நிறுவனம் இன்று காலை 9.30 மணி வரை  180 லோரிகளை பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

ஸ்ரீ மூடா வட்டாரத்தில் குடியிருப்பு பகுதிகளிலும் சாலைகளிலும் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதற்கு இன்று தொடங்கி 200 லோரிகள் பயன்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.

ஸ்ரீ மூடாவில் குப்பைகளை அகற்றும் விரைவில் முழுமை பெறுவதை உறுதி செய்வதற்கு ஏதுவாக அங்கு வெள்ளத்திற்கு பிந்தைய துப்புரவுப் பணிகள் அதிவேகத்தில் மேற்கொள்ளப்படும் என்று கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் நேற்று கூறியிருந்தார்.

இப்பணிக்கு இயந்திரங்கள், தளவாடங்கள் மற்றும் மனித வளம் அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அப்பகுதியில்  நேற்று வரை 35 முதல் 40 விழுக்காட்டு குப்பைகள் அகற்றப்பட்ட வேளையில் எஞ்சிய குப்பைகளை அகற்றும் பணி இன்னும் ஒரு வார காலத்தில் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :