ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

தற்காலிக பாலம் நிர்மாணிப்பு- பொதுப்பணித்துறை, ஆயுதப்படைக்கு இஷாம் நன்றி

ஷா ஆலம், ஜன 4 - உலு லங்காட்டில் உள்ள ஜாலான் சுங்கை லூய் என்ற இடத்தில் தற்காலிக  பாலத்தை நிர்மாணித்த பொதுப்பணித் துறை  (ஜே.கே.ஆர்.) மற்றும் மலேசிய ஆயுதப் படைகளுக்கு (ஏ.டி.எம்.) மாநில அடிப்படை மற்றும் பொது வசதிகள் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹாஷிம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

உலு லங்காட், ஜாலான் சுங்கை லுய் பகுதியில் பெய்லி பாலத்தை நிர்மாணிக்கும் பணியை ஏ.டி.எம். உதவியுடன்  24 மணி நேரத்திற்குள் பெட்டாலிங் மாவட்ட ஜே.கே.ஆர். நிறைவு செய்துள்ளது. 

இந்த பால நிர்மாணிப்பு பணியில்  ஈடுபட்ட அனைத்து தரப்பினருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உள்கட்டமைப்பு சீரமைப்புகள் குறித்த மேம்பாடுகளை பொதுமக்களுக்கு அவ்வப்போது தெரிவிப்பேன் என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

18.24 மீட்டர் நீளமும், 7.35 மீட்டர் அகலமும் கொண்ட இந்த தற்காலிக பாலம் லங்காட் ஆற்றின் குறுக்கே நிமாணிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிக்குச்   செல்லும் பாலம் வெள்ளத்தால் இடிந்து விழுந்ததால் முக்கிய சாலைகளில் இருந்து துண்டிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு உதவும் வகையில் இப்பாலம் கட்டப்பட்டது.

டிசம்பர் 17 மற்றும் டிசம்பர் 19 ஆம் தேதிக்கும்  இடையில் பெய்த அசாதாரண கனமழையின் விளைவாக மாநிலத்தின் பல்வேறு பாவட்டங்களில் கடுமையான வெள்ளம் ஏற்படடது.

Pengarang :