Ahli Dewan Negeri Subang Jaya, Michelle Ng Mei Sze (kiri) menunjukkan penghadang jalan yang dibina MPSJ di hadapan kawasan Sekolah Menengah Kebangsaan Subang Utama, SS18/1B, Subang Jaya. 14 Febuari 2020. Foto REMY ARIFIN/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

கடந்தாண்டில் சுபாங் ஜெயா தொகுதி அமல்படுத்திய மக்கள் நலத் திட்டங்கள்

ஷா ஆலம், ஜன 4– மக்கள் நலனுக்காக சுபாங் ஜெயா சட்டமன்றத் தொகுதி பல்வேறு திட்டங்களை கடந்தாண்டில் அமல்படுத்தியுள்ளது.

கடந்தாண்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் பட்டியலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இங் மேய் ஸீ தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • 7,182 பேருக்கு இலவச கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது
  • 6,916 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது
  • 4,357 பேருக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை காலத்தில் உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன.
  • 3,500 கோவிட்-19 சுயப் பரிசோதனைக் கருவிகள் விநியோகிக்கப்பட்டன
  • 100 குடியிருப்பாளர்களுக்கு ஆக்சிமீட்டர் கருவி வழங்கப்பட்டது
  • 158 பெண்களுக்கு ரோஸ் அறவாரியத்தின் ஒத்துழைப்புடன் கருப்பை நுழைவாயில் புற்று நோய் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
  • 108 மாணவர்கள் இணையம் வழி கல்வி கற்பதற்கு ஏதுவாக கணினிகளைப் பெற்றனர்
  • எஸ்.ஜே. அம்புலன்ஸ் அமைப்புக்கு 10 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டன
  • கோவிட்-19 தடுப்பூசி பெறுவதற்கு 491 மூத்த குடிமக்கள் தடுப்பூசி மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
  • சிறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் பள்ளிகள், பொழுது போக்கு பூங்காக்கள் உள்ளிட்ட 12 இடங்கள் தரம் உயர்த்தப்பட்டன.
  • மன நலம் சார்ந்த நிபுணத்துவ சிகிச்சை தேவைப்படுவோருக்கு உதவித் தொகையுடன் நிபுணத்துவ சேவை வழங்கப்பட்டது.
  • கும்புபோல் தரப்பின் ஒத்துழைப்புடன் அழைப்பு வழி பஸ் சேவை ஏற்படுத்தப்பட்டது.
  • 106,156 கிலோ மறுசுழற்சி பொருள்கள் கடந்த டிசம்பர் 31 வரை சேகரிக்கப்பட்டன
  • வெள்ளத்திற்கு பிந்தைய துப்புரவுப் பணிகளுக்காக 150 தன்னார்வலர்கள்  ஈடுபடுத்தப்பட்டனர்
  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 600 மெத்தைகள் விநியோகிக்கப்பட்டன.

Pengarang :