ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நேற்று வரை 11,481 குடும்பங்கள் 1,000 வெள்ளி வெள்ள உதவித் தொகையைப்  பெற்றன

ஷா ஆலம், ஜன 6- சிலாங்கூரில் நேற்று காலை 10 மணி வரை 11,481 குடும்பங்கள் மாநில அரசின் 1,000 வெள்ளி வெள்ள நிவாரண உதவித் தொகையைப் பெற்றன.

பந்துவான் சிலாங்கூர் பங்கிட் (பி.எஸ்.பி.) திட்டத்தின் கீழ் இதுவரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 கோடியே 15 லட்சத்து 31 ஆயிரம் வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இது தவிர, சிப்பாங் மற்றும் உலு லங்காட்டில் வெள்ளத்தால் உயிரிழந்த ஐவரின் குடும்பத்தினருக்கு தலா 10,000 வெள்ளி உதவித் தொகை வழங்கப்பட்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்கப்படத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெட்டாலிங் மாவட்டத்தில் மிக அதிகமாக அதாவது 4,349 குடும்பத்தினர் உதவித் தொகையைப் பெற்ற வேளையில் அதற்கு அடுத்து உலு லங்காட்டில் 2,143 பேருக்கும் கிள்ளான் மாவட்டத்தில் 1,866 பேருக்கும் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர கோல சிலாங்கூரில் 1,115 பேரும் சிப்பாங்கில் 904 பேரும் கோல லங்காட்டில் 705 பேரும் கோம்பாக்கில் 313 பேரும் உலு சிலாங்கூரில் 51 பேரும் சபாக் பெர்ணம் மாவட்டத்தில் 35 பேரும் இதுவரை உதவித் தொகையைப் பெற்றுள்ளதாக அமிருடின் குறிப்பிட்டார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அடிப்படை வசதிகளை சரி செய்வதற்கும் அந்த பேரிடரில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 10,000 வெள்ளியும் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு தலா 1,000 வெள்ளியும் வழங்கும் நோக்கில் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 10 கோடி வெள்ளியை மாநில அரசு ஒதுக்கீடு செய்தது.


Pengarang :