Sekitar kawasan tapak pelupusan sampah haram di Kampung Olak Lempit, Banting.
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

ஷா ஆலம் வட்டாரத்தில் துப்புரவுப் பணி முற்றுப் பெற்றது- 20,577 டன் குப்பைகள் அகற்றப்பட்டன

ஷா ஆலம், ஜன 7– வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாமான் ஸ்ரீ மூடா உள்பட ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் அதிகாரத்திற்குப்பட்ட பகுதிகளிலிருந்து குப்பைகளை அகற்றும் பணி நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

கடந்த மாதம் மத்தியில் ஏற்பட்ட வெள்ளத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட எட்டு மாவட்டங்களிலிருந்து நேற்று வரை 48,136 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாக மாநிலத்தில் குப்பைகளை அகற்றும் பணிக்கு பொறுப்பேற்றுள்ள கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மெண்ட் நிறுவனம் கூறியது.

ஷா ஆலம் மாநகர் மன்றப் பகுதியில் மிக அதிகமாக அதாவது 20,577 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்று குறிப்பிட்டது.

குப்பைகள் அகற்றப்பட்ட இதர ஊராட்சி மன்றப் பகுதிகள் வருமாறு-

– சிப்பாங் நகராண்மைக் கழகம் -2,537 டன் (100% பூர்த்தி)

– கோல லங்காட் நகராண்மைக் கழகம் – 1,150 டன் ( 100% பூர்த்தி)

– கோல சிலாங்வர் நகராண்மைக் கழகம் -1,078 டன் (100% பூர்த்தி)

– பெ. ஜெயா மாநகர் மன்றம் – 503 டன் (100% பூர்த்தி)

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணியை கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மெண்ட் நிறுவனம் கட்டங் கட்டமாக மேற்கொண்டு வருகிறது. இப்பணி இம்மாத இறுதிக்குள்ள முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :