ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தடுப்பூசி பெற்ற பெரியவர்களின் எண்ணிக்கை 100 விழுக்காட்டை நெருங்குகிறது

கோலாலம்பூர், ஜன 8 - நாட்டில்  தடுப்பூசி பெற்ற 18 வயதுக்கும் மேற்பட்ட பெரியவர்களின் எண்ணிக்கை 100 விழுக்காட்டை நெருங்கியுள்ளது

மொத்தம் 2 கோடியே 28 லட்சத்து 78 ஆயிரத்து 955 பேர் அல்லது 97.7 விழுக்காட்டினர் நேற்று வரை கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

மேலும், 2 கோடியே 31 லட்சத்து 64 ஆயிரத்து 441 பேர் அல்லது  98.9 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இதனிடையே, 12 முதல் 17 வயதுடைய இளையோரில்  27 லட்சத்து 64 ஆயிரத்து 980 பேர் அல்லது 87.8 சதவிகிதத்தினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ள  வேளையில் 28 லட்சத்து 55 ஆயிரத்து 467 பேர் அல்லது 90.7 சதவீதம் பேர்  குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

நேற்று மொத்தம் 216,668 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன . அவற்றில் 2,627 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 3,383 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 210,658 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

 தேசிய கோவிட்-19 நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட  தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 90 லட்சத்து 33 ஆயிரத்து 667 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை ஊக்கத் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 75 லட்சத்து 70 ஆயிரத்து 846 ஆகும்.

இதற்கிடையில், அமைச்சின் கிட்ஹாப் அகப்பக்கம் வெளியிட்ட தகவலின் படி  நேற்று மொத்தம்  கோவிட்-19 தொடர்புடைய 16 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Pengarang :