ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

பேரிடரை எதிர் கொள்ள செயல்திட்டம் – கே.டி.பி.டபள்யு.எம். நிறுவனம் உருவாக்கும்

ஷா ஆலம், ஜன 8- பேரிடரை குறிப்பாக வெள்ளத்தை எதிர் கொள்வதற்கு ஏதுவாக வீயூக நடவடிக்கைத் திட்டத்தை சிலாங்கூர் மாநிலத்தில் குப்பைகளை அகற்றும் பணிக்கு பொறுப்பேற்றுள்ள கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் (கே.டி.இ.பி.எம்.டபள்யு.எம்) கூறியது.

அத்தியாவசியத் தேவையாக விளங்கும் இயந்திரங்கள் மற்றும் தளவாடங்களை அதிகரிப்பது மற்றும் தற்காலிகமாக குப்பைகளை கொட்டும் இடங்களை அடையாளம் காண்பது ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும் என்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.

பேரிடர் காலத்தில் தளவாடங்களை நியாயமான விலையில் பெறுவதற்கு ஏதுவாக வர்த்தக ஸ்தானங்களுடன் தமது நிறுவனம் ஒத்துழைப்பை நல்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதோடு மட்டுமின்றி பேரிடரின் போது நாம் எஸ்.ஒ.பி. எனப்படும் நிலையான செயலாக்க நடைமுறையை கொண்டிருக்க வேண்டும். உதாரணத்திற்கு வெள்ளத்தின் போது எத்தகைய நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்? எவ்வளவு பணியாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்பதை வரையறுக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் வெள்ளம் பாதிக்காத பகுதிகளிலும் குப்பைகளை அகற்ற நமக்கு பணியாளர்கள் தேவைப்படுகின்றனர் என்றார் அவர்.

சிலாங்கூர் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் குப்பைகளை அகற்றும் பொறுப்பை கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மேண்ட் நிறுவனம் கடந்த 2020 ஜனவரி மாதம் ஏற்றுக் கொண்டது.


Pengarang :