ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

நவம்பர் மாதம் நாட்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை குறைந்தது

புத்ரா ஜெயா, ஜன 11- மலேசியாவில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை  கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இறங்கு முகமாக இருந்தது. 

கடந்தாண்டு அக்டோபர் மாதம் 705,000 ஆக இருந்த வேலையில்லாதோர் எண்ணிக்கை நவம்பர் மாதம் 694,400 ஆக குறைந்துள்ளதை மலேசிய மனித வள புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு முதன் முறையாக கடநத நவம்பரில் வேலையில்லாதோர் எண்ணிக்கை ஏழு லட்சத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளதாக தேசிய புள்ளிவிபரத் துறையின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் உஸிர் மாஹிடின் கூறினார்.

வேலை செய்வோரின் எண்ணிக்கை கடந்த 2021 நவம்பரில் 0.4 விழுக்காடு அதிகரித்து 1 கோடியே 56 லட்சத்து 10 ஆயிரம் ஆனது. அதே ஆண்டு அக்டோபரில் இந்த எண்ணிக்கை 1 கோடியே 55 லட்சத்து 50 ஆயிரம் பேராக இருந்தது என்றார் அவர்.

விகிதார அடிப்படையில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை கடந்தாண்டு நவம்பரில் 4.3 விழுக்காடாக இருந்தது. அதற்கு முந்தைய மாதங்களில்  இந்த எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்தாண்டு நவம்பரில் மனித வளம் நிலைத்தன்மையுடன் இருந்ததோடு வேலையில்லாதோர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. சமூக மற்றும் பொருளார நடவடிக்கைள் மீண்டும் புத்துயிர் பெற்று துடிப்புடன் செயல்பட ஆரம்பித்த காரணத்தால் மனித வளச் சந்தையில் நேர்மறையான மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.


Pengarang :