ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

வரும் சனியன்று பிளாசா மாசாலமில் நடமாடும் அலுவலக சேவை- எம்.பி.எஸ்.ஏ, வழங்குகிறது

ஷா ஆலம், ஜன 11- இங்குள்ள செக்சன் 9, பிளாசா மாசாலாம் கார் நிறுத்துமிடத்தில் நடமாடும் அலுவலக சேவையை ஷா ஆலம் மாநகர் மன்றம் மேற்கொள்ளவுள்ளது.

மாநகர் மன்றம் சம்பந்தப்பட்ட அலுவல்களை அலுவலகத்திற்கு வர வேண்டிய அவசியமின்றி வார இறுதி நாட்களில் மேற்கொள்வதற்கான வாய்ப்பினை பொது மக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த சேவை வழங்கப்படுகிறது.

இந்த நடமாடும் அலுவலகம் சனிக்கிழமை காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும் என்று மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் தொடர்புப் பிரிவின் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

மதிப்பீட்டு வரியைச் சரிபார்ப்பது, செலுத்துவது, கார் நிறுத்தமிட அபராதங்களைச் செலுத்துவது போன்ற பணிகளை இங்கு மேற்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.

இத்தகைய நடமாடும் அலுவலகத்தின் வாயிலாக பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவையை மேலும் ஆக்ககரமனதாக ஆக்க முடியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

பொது மக்கள் நிலுவையில் உள்ள குற்றப்பதிவுகளுக்கான அபாரதத் தொகையை செலுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதை எளிதாக்கும் வகையில் இந்த நடமாடும் அலுவலக சேவையை மாநகர் மன்றம் இதற்கு முன்னர் பல இடங்களில் நடத்தி வந்துள்ளது.


Pengarang :