ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

ரமலான் சந்தைக்கு ஜனவரி 17 முதல் விண்ணப்பிக்கலாம்- எம்.பி.எஸ்.ஏ. தகவல்

ஷா ஆலம் ஜன 11- ரமலான் சந்தைகளில் வியாபாரம் செய்வதற்கு இம்மாதம் 17 ஆம் தேதி முதல் இணையம் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என்று ஷா ஆலம் மாநகர் மன்றம் கூறியுள்ளது.

வரும் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி வரை இதற்கான விண்ணப்பங்களைச் செய்யலாம் என்று மாநகர் மன்றத்தின் வர்த்தக தொடர்பு பிரிவு கூறியது.

இந்த ரமலான் சந்தைக்கான விண்ணப்பாரங்களை இணையம் வாயிலாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டது.

ஷா ஆலம் வட்டாரம் முழுவதும் 33 இடங்களில் ரமலான் சந்தையை நடத்த மாநகர் மன்றம் ஏற்பாடு செய்துள்ளதாக மாநகர் மன்றத்தின் வர்த்தக தொடர்பு பிரிவின் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.


Pengarang :