ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

வெள்ளம் பாதித்த ஆறு மாநிலங்களில் 85,134 டன் குப்பைகள் அகற்றப்பட்டன

மூவார், ஜன 16- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களில் நேற்று வரை  85,134 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

பகாங், மலாக்கா, நெகிரி செம்பிலான், கூட்டரசு பிரதேசம், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் குப்பை அகற்றும் பணி 98 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ள  வேளையில் ஜொகூரில் 90 விழுக்காடு நிறைவு பெற்றுள்ளதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அப்துல் முத்தலிப் கூறினார்.

எஸ்.டபள்யூ.கோர்ப் நிறுவனத்தின் மேற்பார்வையில் 112 இயந்திரங்கள் மற்றும் 354 ஊழியர்கள் இந்த குப்பை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூரில் 48,589 டன் குப்பைகளும் பகாங்கில் 34,100 டன் குப்பைகளும் நெகிரி செம்பிலானில் 1,400 டன் குப்பைகளும் கோலாலம்பூரில் 630 டன் குப்பைகளும் மலாக்காவில் 139 டன் குப்பைகளும் அகற்றப்பட்டன என்று அவர் சொன்னார்.

வெள்ளத்திற்கு பிந்தைய மீட்சித் திட்டங்களுக்காக அமைச்சு இதுவரை 11 கோடியே 75 லட்சம் வெள்ளியைச் செலவிட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

ஊராட்சி மன்றங்களை உட்படுத்திய குப்பை அகற்றும் பணிக்கு 1 கோடியே 25 லட்சம் வெள்ளியும் பேரிடர் உதவித் திட்டத்திற்கு 50 லட்சம் வெள்ளியும் செலவிடப்பட்டன என்றார் அவர்.


Pengarang :