ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில்  3,010 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிப்பு

கோலாலம்பூர், ஜன 14- நாட்டில்  3,010 கோவிட்-19 நோய்த் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின  முன்தினம்  இந்த எண்ணிக்கை 3,346 ஆக இருந்ததாக  சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். நேற்றைய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 08ஆயிரத்து 347 ஆக அதிகரித்துள்ளதாக  அவர் சொன்னார்.

நேற்று 2,828 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதன் வழி நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டவர்களின் மொத்த  எண்ணிக்கை 27 லட்சத்து 32 ஆயிரத்து 771 ஆக உயர்வு கண்டுள்ளது. நேற்றைய தொற்றுகளில் 30   சம்பவங்கள்   மூன்றாம் நான்காம்  மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பையும் எஞ்சிய 3,044 தொற்றுகள் (99 விழுக்காடு) ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பையும் கொண்டுள்ளதாக  நோர் ஹிஷாம் கூறினார். தீவிர சிகிச்சைப் பிரிவில் 193 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் 90 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது என்று  கோவிட்-19 நோய்த் தொற்றின் சமீபத்திய நிலவரங்கள் தொடர்பில்  வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.


Pengarang :