ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

பக்தர்களின் வருகை அதிகரிப்பு- களைகட்டுகிறது பத்துமலைத் தைப்பூசம்

கோலாலம்பூர், ஜன 17- தைப்பூசத் திருநாளை முன்னிட்டு இங்குள்ள பத்துகேவ்ஸ், ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தேவஸ்தானத்தில் பக்தர்கள் நேற்று தொடங்கி கூடத் தொடங்கி விட்டனர்.

தைப்பூச விழா வரும் 18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டாலும் நேற்று தொடங்கி பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் இத்திருத்தலத்தில் கூடி முருகப் பெருமானை வழிபடுவதையும் நேர்த்திக் கடனைச் செலுத்துவதையும் காண முடிந்தது.

தங்களின் வேண்டுதலை நிறைவேற்றிய முருகப் பெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாக பக்தர்கள் பால் குடம் ஏந்தி நேர்த்திக் கடனைச் செலுத்தும் காட்சியைக் காண முடிந்தது.

நேற்று காலை 8.00 மணி முதல் பல்லினங்களைச் சேர்ந்தவர்கள் தைப்பூசி விழாவில் கலந்து கொள்வதற்காக பத்துமலையில் குழுமியிருந்தனர். அவர்கள் அனைவரும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை கடைபிடிப்பதும் உறுதி செய்யப்பட்டது.

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு முன்பு இருந்த தை விட வெகு தொலைவில் பூக்கள் மற்றும் வழிபாட்டுப் பொருள்கள் விற்கும் சில கடைகள் செயல்படுகின்றன.

ஆலயத்தில் நேற்று நள்ளிரவு தொடங்கி பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி விட்டதாக பத்துலை திருத்தலத்தின் தகவல் அதிகாரியான கே.தமிழ்வாணி கூறினார்.

அனைத்து பக்தர்களும் மைசெஜாத்ரா செயலியை ஸ்கேன் செய்வது, உடல் உஷ்ணத்தை அளவிடுவது உள்ளிட்ட எஸ்.ஒ.பி. விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். அதோடு மட்டுமின்றி பக்தர்கள் ஆலய வளாகத்தில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே இருக்கும் வகையில் அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன என்றார் அவர்.

ஒரு சமயத்தில் 500 பக்தர்கள் மட்டுமே ஆலய வளாகத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். கூடல் இடைவெளியை உறுதி செய்வதற்கும் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்கும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.


Pengarang :