ECONOMY

தைப்பூசத்தை படம் பிடிப்பதற்கு டிரோன் சாதனத்தைப் பயன்படுத்த அனுமதி தேவை

கோலாலம்பூர், ஜன 17- தைப்பூச விழாக் காட்சிகளை ஆகாயத்திலிருந்து படம் எடுப்பதற்கு டிரோன் சாதனத்தை பயன்படுத்த மலேசிய பொது வான் போக்குவரத்து அமலாக்கத் துறையின் அனுமதி தேவை என்று காவல் துறை கூறியுள்ளது.

அனுமதியின்றி டிரோன் சாதனங்களைப் பயன்படுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் இயக்குநர் டத்தோ ஹசானி கசாலி கூறினார்.

நேற்று தொடங்கிய தைப்பூச விழா சீராக நடைபெறுவதை உறுதி செய்யும் பணியில் மத்திய சேமப் படை உறுப்பினர்களும் ஈடுபடுவர் என்று அவர் சொன்னார்.

இதனிடையே, சிலாங்கூரின் இரு இடங்களில் பெரிய அளவில் கொண்டாடப்படும் தைப்பூச விழாவின் போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சுமார் 2,000 போலீஸ்காரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

பத்துமலை தைப்பூச விழாவில் 1,500 போலீஸ்காரர்கள் பணியில் அமர்த்தப்படும் வேளையில் எஞ்சிய போலீஸ்காரர்கள் கோல சிலாங்கூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்றார் அவர்.

பினாங்கு தைப்பூச விழாவின் போது 1,300 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்வர் என்று தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சோப்பியான் சந்தோங் தெரிவித்தார்.

 


Pengarang :