ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

தொழில்முனைவோருக்கு உதவ 7 வர்த்தக கடனுதவித் திட்டங்கள்- ஹிஜ்ரா வழங்குகிறது

ஷா ஆலம், ஜன 18-  வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய விரும்பும் தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் எழு கடனுதவித் திட்டங்களை  யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியம் அறிமுகப்படுத்துகிறது.

ஐ.பி.ஆர். எனப்படும் பெடுலி ராக்யாட் திட்டத்தின் கீழ அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டங்களுக்கு  http://mikrokredit.selangor.gov.my/e-hijrah/login என்ற அகப்பக்கம் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம். இத்திட்டங்கள் தொடர்பான மேல் விபரங்களை  www.hijrahselangor.com. என்ற அகப்பக்கம் வழி அறிந்து கொள்ளலாம்.

வர்த்தகத்தை விரிவு படுத்துவதற்கு மூலதன உதவி தேவைப்படும் தொழிலமுனைவர் இந்த ஹிஜ்ரா சிலாங்கூர் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று அந்த அறவாரியம் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

வர்த்தகர்களுக்கு வழங்கப்படும் 7 கடனுதவித் திட்டங்களின் பட்டியலையும் அது வெளியிட்டுள்ளது.  i-Bisnes, Zero to Hero, Niaga Darul Ehsan (NaDI), Go Digital, i-Lestari, i-Agro dan i-Bermusim ஆகியவையே அந்த ஏழு கடனுதவித் திட்டங்களாகும்.

ஹிஜ்ரா கடனுதவித் திட்டத்தில் இவ்வாண்டு சில மாற்றங்கள் செய்யப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இவ்வாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது கூறியிருந்தார்.


Pengarang :