ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

புக்கிட் மெலாவத்தி தொகுதி ஏற்பாட்டில் இலவச சிகையலங்கரிப்பு பயிற்சி

ஷா ஆலம், ஜன 20- புக்கிட் மெலாவத்தி தொகுதி ஏற்பாட்டில் ஒரு மாத கால இலவச சிகையலங்கரிப்பு பயிற்சி நடைபெறவுள்ளது.

இந்த பயிற்சியில் பங்கேற்பதற்கு வரும் பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி கூறினார்.

உள்நாட்டு பிரஜைகள் மற்றும் வேலையில்லாத பட்டதாரிகளை இலக்காக கொண்ட இத்திட்டம் பெஞ்சானா எனப்படும்  தேசிய பொருளாதார மறு புத்துயிர்த் திட்டத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

இந்த ஒரு மாத காலப் பயிற்சியின் மூலம் சிகையலங்கரிப்புத் துறையில் தேர்ச்சி பெற்று அதின் மூலம் வருமானம் ஈட்டுவதற்குரிய வாய்ப்பினை பெற முடியும் என அவர் தெரிவித்தார்.

இந்த பயிற்சியில் பங்கேற்போருக்கு வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்தித் தரப்படும் என்று தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர்    https://wasap.my/60134938577/barber-PejabatAdun என்ற அகப்பக்கம் வாயிலாக தொடர் கொள்ளலாம்.

இந்த பயிற்சியில் பங்கேற்போருக்கு சீருடை மற்றும் பயிற்சிக்கான உபகரணங்கள் வழங்கப்படும் என்பதோடு உணவு, தங்குமிட வசதி ஆகியவையும் ஏற்பாடு செய்து தரப்படும்.

 


Pengarang :