ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

 நூற்றுக்கணக்கான வர்த்தக லைசென்ஸ் விண்ணப்பங்கள் நிராகரிப்பு- காஜாங் நகராண்மைக் கழகம் தகவல்

ஷா ஆலம், ஜன 20-  நூற்றுக்கணக்கான வர்த்தக லைசென்ஸ் விண்ணப்பங்களை காஜாங் நகராண்மைக் கழகம் நிராகரித்துள்ளது. உரிய அனுமதி பெறாமல் வர்த்தக மையங்களை மாற்றியமைத்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

வர்த்தக லைசென்ஸ் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட வர்த்தக மையங்களில் பாரம்பரிய உடம்பு பிடி நிலையம், உணவுக் கடைகள், சிகையலங்கரிப்பு நிலையங்கள் ஆகியவையும் அடங்கும் என்று நகராண்மைக் கழகத்தின் பொது உறவு அதிகாரி கமாருள் இஸ்லான் சுலைமான் கூறினார்.

மேலும் 300 எச்சரிக்கை கடிதங்கள் மற்றும் லைசென்ஸ் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை அறிவிக்கும் கடிதங்கள் வழங்கப்பட்டதோடு லைசென்ஸ் இன்றியும் லைசென்ஸ் காலாவதியான நிலையிலும் செயல்பட்ட 135 மையங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றத் தவறும் வணிக மையங்களுக்கு எதிராக சீல் வைப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.


Pengarang :