Ahli Dewan Negeri (ADN) Tanjung Sepat, Borhan Aman Shah
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள், மீட்பு பணியாளர்களுக்கு உணவுப் பொருள் விநியோகம்

ஷா ஆலம், ஜன 21– வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை பொருள்கள் அடங்கிய 5,700 உணவுக் கூடைகளை விநியோகிக்கப் படவுள்ளன.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சுமையை குறைக்கும் அதே வேளையில் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினரின் வருமானத்தை பெருக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட “புரோடாக் கம்போங் ஃபோர்யூ“ என்னும் திட்டத்தின் கீழ் இந்த உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டவுள்ளதாக புறநகர் மற்றும் பாரம்பரிய கிராம மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் புர்ஹான் அமான் ஷா கூறினார்.

சுமார் 500,000 வெள்ளி செலவிலான இத்திட்டத்தை கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவினருக்காக அமல்படுத்த தொடக்கத்தில்  திட்டமிடப்பட்டிருந்த தாகவும் எனினும் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து வெள்ள அகதிகளுக்கான உதவித் திட்டமாக பின்னர் மாற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

முதல் கட்டமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 3,700 பேருக்கு இந்த உணவுக் கூடைகளை வழங்கவிருக்கிறோம். எஞ்சிய பொட்டலங்கள் வெள்ள மீட்பு பணியாளர்களுக்கு அவர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் என்றார் அவர்.

 


Pengarang :